தென்னிலை-10 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி உறுதிமொழி ஏற்ற விவசாயிகள் சங்கத்தினர்

தென்னிலை-10 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி உறுதிமொழி ஏற்ற விவசாயிகள் சங்கத்தினர்
தென்னிலை-10 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி உறுதிமொழி ஏற்ற விவசாயிகள் சங்கத்தினர் தமிழக விவசாய பாதுகாப்பு சங்கம் சார்பில் தென்னிலையில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட செயலாளர் ராஜா தலைமையில் உறுதிமொழி ஏற்றனர். அப்போது,மத்திய அரசு விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6 ஆயிரம் ரூபாய் வழங்கி வரும் நிதி உதவி திட்டத்தின் கீழ் குத்தகை விவசாயிகள் உட்பட அனைத்து விவசாயிகளுக்கும் எவ்வித நிபந்தனை இன்றி ஆண்டிற்கு 20 ஆயிரம் ரூபாய் உயர்த்தி வழங்க வேண்டும். மத்திய அரசு ஒவ்வொரு முறை இந்திய முழுவதும் நிலுவையில் உள்ள விவசாயிகளுக்கு அனைத்து பயிர் கடன்களும் தள்ளுபடி செய்ய வேண்டும். தமிழ்நாடு அரசு கூட்டுறவு சங்கங்களில் பயிர் கடன் உள்ளிட்ட அனைத்து விவசாய கடன்களுக்கு சிவில் ரிப்போர்ட் பார்க்கப்படும் என்கின்ற கொள்கை முடிவை ரத்து செய்ய வேண்டும். அமராவதி ஆற்றில் உபரி நீரை வறட்சி பகுதியான தென்னிலை, க.பரமத்தி பகுதிகளுக்கு கொண்டுவர குளம் குட்டை வெட்டி எடுக்கப்பட்ட கல் குவாரி குழிகளில் நிரப்பவேண்டும். உள்ளிட்ட 10 கோரிக்கைகள் வைத்து வீரவணக்கம் நிகழ்ச்சியில் தமிழக விவசாய பாதுகாப்பு சங்கத்தினர் உறுதிமொழி ஏற்றனர்.இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story