கோவை குண்டுவெடிப்பு வழக்கு : டெய்லர் ராஜாவின் 10 நாள் காவலுக்கு போலீசார் மனு தாக்கல் செய்யும் திட்டம்!

கோவை குண்டுவெடிப்பு வழக்கு : டெய்லர் ராஜாவின் 10 நாள் காவலுக்கு போலீசார் மனு தாக்கல் செய்யும் திட்டம்!
X
குண்டுவெடிப்பு வழக்கில் 28 ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்யப்பட்ட டெய்லர் ராஜாவை, காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
1998-ல் கோவையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 28 ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்யப்பட்ட டெய்லர் ராஜாவை, காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். நாளை கோவை ஐந்தாவது குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளனர். டெய்லர் ராஜா, வெடிகுண்டுகள் தயாரிப்பு மற்றும் ஆலோசனையில் முக்கியபங்காற்றியுள்ளார் என விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், சம்பவத்திற்குப் பிறகு பெயரை மாற்றி, கர்நாடகாவில் காய்கறி வியாபாரியாக வாழ்ந்துள்ளார். இந்தக் காலப்போக்கில் பலமுறை கோவைக்கும் வந்துள்ளார் என்றும், யாரால் தங்கவைக்கப்பட்டார் என்பதையும் போலீசார் தீவிரமாக விசாரிக்கத் திட்டமிட்டுள்ளனர். 10 நாள் காவலில் விசாரித்தால் முக்கிய குற்றவாளிகள் தொடர்பான தகவல்கள் கிடைக்கும் என போலீசார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
Next Story