குழந்தைகள் பாதுகாப்பு ஆய்வுக் கூட்டம்: கோவையில் 10 மாவட்ட அதிகாரிகள் பங்கேற்பு!
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் விஜயா தலைமையில் 10 மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, நீலகிரி, நாமக்கல், சேலம், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்ட அதிகாரிகள் கலந்து கொண்டு துறை நடவடிக்கைகள், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு மற்றும் போதைக்கு அடிமையாகும் சிறுவர்கள் மீட்பு குறித்து விவாதித்தனர். தற்போதைய நடவடிக்கைகளை மேம்படுத்தும் வழிகள் பற்றியும் ஆலோசிக்கப்பட்டது. இதையடுத்து, ஆணையத் தலைவர் விஜயா, உறுப்பினர்கள் கசிமிர் ராஜ், ஸ்ரீ காவ்யா நாகராஜன் ஆகியோர் கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்து மேலதிக கலந்துரையாடல் நடத்தினர்.
Next Story



