திருப்பூர் அருகே அரசு பேருந்து சாலை தடுப்பில் மோதி விபத்து 10 பேர் காயம்

X
தென்காசியில் இருந்து 20க்கும் மேற்பட்ட பயணிகளுடன் திருப்பூர் நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பேருந்தானது இன்று காலை 5 மணி அளவில் தாராபுரம் சாலை செட்டிபாளையம் அருகே வந்து கொண்டு இருந்தபோது ( ஒருவழிப்பாதையில் எதிரே வந்த லாரி மீது மோதாமல் இருப்பதற்காக ) பேருந்து ஓட்டுநர் வலது புறமாக பேருந்தை திருப்பியபோது சாலையில் உள்ள தடுப்புகளில் மோதி பேருந்து விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தின் முன் பகுதி பலத்த சேதம் அடைந்த நிலையில் பேருந்தில் இருந்த பயணிகள் பத்திருக்கும் மேற்பட்டோர் லேசான காயங்களுடன் திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் ஜேசிபி இயந்திரம் வரவழைக்கப்பட்டு பேருந்தானது அப்புறப்படுத்தப்பட்டது. சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

