திருப்பத்தூரில் தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி சாலை மறியல் போராட்டம்*
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி சாலை மறியல் போராட்டம்* திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் பாரத ஸ்டேட் பேங்க் முன்பு தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோஜாக்) சார்பில் பழைய ஓய்வு ஊதிய திட்டம் இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் அரசாணை 243 ரத்து செய்து செய்ய வேண்டும். தேர்தல் வாக்குறுதில் கூறியபடி தமிழக அரசு தமிழ்நாட்டின் ஆசிரியர்களுக்கு அரசு ஊதியர்களுக்கும் தன் பங்கேற்பு ஓய்வு ஊதியம் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வு ஊதியத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் இடைநிலை ஆசிரியர்களுக்கு கடந்த இரண்டு ஊதிய குழுக்களில் இழைக்கப்பட்ட அநீதி களையப்பட்டு ஊதிய முரண்பாடுகளை நீக்கி மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கிட வேண்டும் தமிழ்நாடு முழுவதும் காலியாக உள்ள அனைத்து ஆசிரியர்களும் பணியிடங்களை நிரப்பிட வேண்டும் உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போ திடீரென பாரத ஸ்டேட் பேங்க் முன்பு திருப்பத்தூர் வழியாக கிருஷ்ணகிரி செல்லும் சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
Next Story



