கரூரில் நடைபெற்ற இந்து முன்னணி மாநில செயற்குழு கூட்டத்தில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றம்.

கரூரில் நடைபெற்ற இந்து முன்னணி மாநில செயற்குழு கூட்டத்தில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றம்.
கரூரில் நடைபெற்ற இந்து முன்னணி மாநில செயற்குழு கூட்டத்தில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றம். கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கரூர் - கோவை சாலையில் உள்ள தனியார் கூட்ட அரங்கில் இந்து முன்னணியின் மாநில செயற்குழு கூட்டம் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தென்பாரத அமைப்பாளர் பக்தன், மாநில அமைப்பாளர் ராஜேஷ் ,மாநில பொது செயலாளர்கள் முருகானந்தம் , அரசு ராஜா , பரமேஸ்வரன் , கிஷோர் குமார் உள்ளிட்ட அனைத்து மாவட்ட ,கோட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தின் நிறைவில் உள்நோக்குத்துடன் செயல்படும் காவல்துறை அதிகாரி ஏடிஜிபி டேவிட் ஆசீர்வாதத்திற்கு கண்டனம் தெரிவித்தும் , மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாடு இந்து மக்களிடையே எழுச்சியை ஏற்படுத்தியுள்ளதற்கு பாராட்டு தெரிவித்தும், புதுச்சேரியில் கோவில் சொத்து அபகரிப்பாளருக்கு அமைச்சர் பதவி வழங்கியதற்கு ஹிந்து முன்னணி சார்பில் கண்டனம் தெரிவித்தல் உள்ளிட்ட 10 தீர்மானங்களை நிறைவேற்றினர்.
Next Story