தோட்டத்தில் சிக்கிய 10அடி நீளமுள்ள மலைப்பாம்பு

தோட்டத்தில் சிக்கிய 10அடி நீளமுள்ள மலைப்பாம்பு
X
சித்தையன்கோட்டை அருகே தோட்டத்தில் சிக்கிய 10அடி நீளமுள்ள மலைப்பாம்பு
திண்டுக்கல் சித்தையன்கோட்டை அருகே இஸ்மாயில் முகமது என்பவரது தோட்டத்தில் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று ஆட்டுக்கிடை அமைக்கப்பட்டிருந்த வலையில் சிக்கியது. இது குறித்து ஆத்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் மலைப்பாம்பை உயிருடன் பிடித்து பாதுகாப்பாக வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். சித்தையன்கோட்டை பகுதியில் இருந்த 10 அடி நீளமுள்ள மலைப் பாம்பால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story