கோவையில் சூரிய சக்தி வேளாண்மை மாநாடு: 10 மாநில மாணவர்கள் பங்கேற்பு !

X
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில், வேளாண் பயன்பாட்டிற்கான சூரிய சக்தி மின்சாரம் குறித்து சர்வதேச மாநாடு நேற்று தொடங்கியது. பல்கலைக்கழக துணைவேந்தர் (பொறுப்பு) தமிழ்வேந்தன் மற்றும் நபார்டு தலைமை பொது மேலாளர் ஆனந்த் விழாவைத் தொடங்கி வைத்தனர். இரண்டு நாள் மாநாட்டில், 10 மாநிலங்களைச் சேர்ந்த ஐஐடி மாணவர்கள் மற்றும் உலகின் பல்வேறு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த சுமார் 350 பேர் பங்கேற்றுள்ளனர். மாநாட்டில், சூரிய சக்தியை வேளாண் துறையில் பயன்படுத்தும் தொழில்நுட்பங்கள், நவீன கருவிகள் மற்றும் செயல்முறைகள் குறித்த கருத்தரங்குகள் நடைபெறுகின்றன.
Next Story

