ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்க பூமி பூஜை.

ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்க பூமி பூஜை.
X
ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்க பூமி பூஜை மாவட்ட செயலாளர் மூர்த்தி கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.
பரமத்தி வேலூர், ஆகஸ்ட்.6: நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா ஆனங்கூர் பஞ்சாயத்தில் பாகம்பாளையம் சாலை வரை ரூ.8.31 லட்சம் பதிப்பிலும்,குன்னத்தூர் சாமிநாதபுரம் அருந்ததியர் தெரு மக்கள் பயன்படுத்தும் மாயணத்திற்கு செல்லும் சாலை  ரூ. 2.9 லட்சம் மதிப்பிலும்  சிமெண்ட் சாலை அமைக்க புதன்கிழமை பூமி பூஜை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கபிலர்மலை தெற்கு திமுக ஒன்றிய செயலாளர் சாமிநாதன்  முன்னிலை வகித்தார். நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் கே.எஸ்.மூர்த்தி கலந்துகொண்டு பூமி பூஜையை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொறியாளர் அணி தலைவர் அருண், கபிலர்மலை ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளர் சுரேஷ் உட்பட்ட நிர்வாகிகள் மற்றும்  பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.
Next Story