லாரியில் கடத்தி வந்த ரூ.10லட்சம் பயோ டீசல் பறிமுதல் - டிரைவர் கைது!

லாரியில் கடத்தி வந்த ரூ.10லட்சம் பயோ டீசல் பறிமுதல் - டிரைவர் கைது!
X
தூத்துக்குடியில் லாரியில் கடத்தி வந்த ரூ.10லட்சம் பயோ டீசல் பறிமுதல் - டிரைவர் கைது!
தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்களை குறி வைத்து கள்ளசந்தையில் பயோ டீசல் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருவதாக புகார்கள் வந்தனர். அதன்பேரில் தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகம் பகுதியில் தென்பாகம் போலீசார்அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது, மீன்பிடி துறைமுகம் பெட்ரோல் பங்க் அருகே சந்தேகப்படும்படியாக ஒரு லாரி நின்று கொண்டிருந்தது. அந்த லாரியில் 200 லிட்டர் பேரல்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. போலீசார் அந்த லாரியை சோதனை செய்த போது, அந்த பேரல்களில் டீசல் போன்ற எண்ணெய் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அதில் இருந்த 4ஆயிரம் லிட்டர் பயோ டீசலை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.10 லட்சம் ஆகும். இது தொடர்பாக அந்த லாரியை ஓட்டி வந்த சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த வினோத்குமார் (39) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தியதில், பயோ டீசலை சிவகங்கையில் இருந்து கொண்டு வந்து இங்குள்ள விசைப் படகுகளுக்கு ஏஜெண்டுகள் மூலம் சப்ளை செய்வதற்காக கொண்டு வந்ததாக கூறினார். பின்னர் அவரையும் பயோ டீசல் லாரியுடன் உணவு தடுப்பு பிரிவு அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.
Next Story