கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபருக்கு ஆயுள் தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம்

கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபருக்கு ஆயுள் தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம்
X
கொடைக்கானலில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபருக்கு ஆயுள் தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த 2020-ம் ஆண்டு மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் விஸ்வலிங்கம்(எ) அனில்குமார்(50) என்பவரை கொலை செய்த வழக்கில் கொடைக்கானலை சேர்ந்த ஆரிப்ஜான்(40) என்பவரை கொடைக்கானல் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இவ்வழக்கு பழனியில் உள்ள கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த நிலையில் இன்று பழனி கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி அவர்கள் ஆரிப்ஜானுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
Next Story