தஞ்சாவூர் மாவட்டத்தில், 10 வட்டங்களிலும் இன்று பொது விநியோகத் திட்ட குறைதீர் கூட்டம்

X
பொது விநியோகத் திட்டத்தில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பின், அதனைக் களைவதற்கும், மக்களின் குறைகளைக் கேட்டு அவற்றை உடனுக்குடன் நிவர்த்தி செய்வதற்கும், ஒவ்வொரு மாதமும் மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களிலும் பொது விநியோகத்திட்டம் தொடர்பாக பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி செப்டம்பர் 2025 மாதத்திற்கான பொதுவிநியோகத்திட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், இன்று 13.09.2025 சனிக்கிழமை அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களிலும் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்களுக்கு குறைகள் ஏதும் இருப்பின் தொடர்புடைய வட்ட வழங்கல் அலுவலகத்தில் வட்ட வழங்கல் அலுவலரிடம் மனுக்கள் அளித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பா.பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
Next Story

