தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம் (சிஐடியூ) 10வது மாநில மாநாடு பேரணி மற்றும் பொதுக்கூட்டம்
பெரம்பலூரில் தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம் (சிஐடியூ) 10வது மாநில மாநாடு பேரணி மற்றும் பொதுக்கூட்டம் பெரம்பலூர் பாலக்கரையில் துவங்கிய பேரணியை சிஐடியூ மாநில துணை தலைவர் கருப்பையன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணி வெங்கடேசபுரம், சங்கு பேட்டை, கடைவீதி ஆகிய முக்கிய வீதி வழியாக பொதுக்கூட்டம் நடக்கும் வானொலித்திடல் முடிவடைந்தது. அங்கு நடந்த பொதுகூட்டத்திற்கு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம் மாநில தலைவர் குமார் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ரமேஷ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்லதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிஐடியூ மாநில தலைவர் சவுந்தரராசன், மாநில செயலாளர் மகேந்திரன், ஆட்டோ தொழிலாளர் சங்க பொதுசெயலாளர் சிவாஜி, செயல் தலைவர் பாலசுப்ரமணியன், மாவட்ட கன்வீனர் அகஸ்டின் ஆகியோர் தமிழக அரசிடம், ஆட்டோ தொழிலாளிகளின் மீது ஏவப்படுகிற அவ பெயரைப் போக்கிடவேண்டும், மீட்டர் கட்டணத்தை அறிவிக்க வேண்டும், அரசே ஆட்டோ செயலியை உருவாக்க வேண்டும், ஆன்லைன் அபராதத்தை கைவிட வேண்டும். பைக் டாக்ஸியை தடை செய்ய வேண்டும், மானிய விலையில் ஆட்டோ தொழிலாளர்களுக்கு எரிபொருள் வழங்க வேண்டும், ஆட்டோ தொழிலாளர்களுக்கு வீடு கட்ட நல வாரியம் மூலம் ரூபாய் 4 லட்சம் வழங்க வேண்டும், விபத்து மரணத்திற்கு 8 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியறுத்தி பேசினர். முன்னதாக வரவேற்பு குழு தலைவரும், செயலாளருமான ரெங்கநாதன் வரவேற்றார். முடிவில் ஆட்டோ சங்க மாவட்ட பொருளாளர் சிவசங்கர் நன்றி கூறினார்.
Next Story




