புதுக்கோட்டை: பூட்டை உடைத்து 10 பவுன் நகை கொள்ளை

குற்றச் செய்திகள்
ஆவுடையார்கோவில் அடுத்த சாத்தியடி கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவரின் மனைவி மாதரசி பொன்பேத்தி அரசினர் உயர்நிலைப் பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் விடுமுறை என்பதால் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றிருந்த நிலையில், வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 10 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து திருப்புனவாசல் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Next Story