கரூரில் சம்பவத்தில் பலியான இரண்டு பேர் குடும்பத்திற்கு 10 லட்சம் அமைச்சர் வழங்கினார்

X
கரூரில் கடந்த 27-ந் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த குடும்பத்தினருக்கு, முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அரசு அறிவித்திருந்தது. அதைத் தொடர்ந்து தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் காங்கேயம் நகராட்சி அலுவலகத்தில் வெள்ளகோவிலை சேர்ந்த உயிரிழந்த மணிகண்டன் மற்றும் கோகுலபிரியா ஆகியோர் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.10 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் மனிஷ்நாரணவரே, தாராபுரம் ஆர்.டி.ஓ. பெலிக்ஸ் ராஜா, காங்கேயம் தாசில்தார் மோகனன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் கார்த்திகேயன், நகரச் செயலாளர் வசந்தம் சேமலையப்பன், ஒன்றிய செயலாளர் சிவானந்தன் உள்பட உயிரிழந்தோர் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.
Next Story

