ராசிபுரம் அருகே அரசு விரைவு பேருந்து புளிய மரத்தில் மோதி விபத்து.10 கும் மேற்பட்டோர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்...

X
Rasipuram King 24x7 |22 Nov 2025 7:54 PM ISTராசிபுரம் அருகே அரசு விரைவு பேருந்து புளிய மரத்தில் மோதி விபத்து.10 கும் மேற்பட்டோர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்...
சென்னையில் இருந்து 40-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசு விரைவு பேருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு நாமக்கலை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த காக்காவேரி பகுதி அருகே ஓட்டுனர் லோகநாதன்(40) என்பவர் ஓட்டிச் சென்ற நிலையில் அப்போது எதிர் திசையில் வந்த லாரி வந்ததாகவும் அதன் மீது மோதாமல் இருக்க ஓட்டுனர் லோகநாதன் பிரேக் பிடித்துள்ளார். மலையின் காரணமாக பேருந்து பிடிக்காததால் சாலையோரத்தில் இருந்த புளிய மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.இந்த விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் சிறு காயங்களுடன் உயிர் தப்பிய நிலையில் சிகிச்சைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.பின்னர் புளிய மரத்தின் மோதி நின்ற பேருந்தை நாமகிரிப்பேட்டை காவல் துறையினர் உதவியுடன் அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் விபத்து தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்...
Next Story
