நாமக்கல்லில் ஜனவரி -10 சனிக்கிழமை டி.எம்.காளியண்ண கவுண்டர் 105வது பிறந்தநாள் விழா!-அனைவரும் பங்கேற்க காங்கிரஸ் கட்சி அழைப்பு

நாமக்கல்லில் ஜனவரி -10 சனிக்கிழமை டி.எம்.காளியண்ண கவுண்டர் 105வது பிறந்தநாள் விழா!-அனைவரும் பங்கேற்க காங்கிரஸ் கட்சி அழைப்பு
X
கர்மயோகி டி.எம். காளியண்ணன் கவுண்டர் அவர்களது 105வது ஆண்டு பிறந்த தின விழா தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் நாமக்கல்லில் நடைப்பெறுகிறது
இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்பினர் மறைந்த டி.எம்.காளியண்ணன் அவர்களது 105 வது பிறந்த நாள் விழா நாமக்கல்லில் நடைபெற உள்ளது இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில செய்தி தொடர்பாளரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஓபிசி பிரிவின் மாநில துணைத் தலைவர் டாக்டர் பி.வி. செந்தில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது... இந்திய அரசியல் நிர்ணய சபையிலும், சுதந்திர இந்தியாவின் முதல் பாராளுமன்றத்திலும், தமிழகத்தின் முதல் சட்டமன்றத்திலும் என முதல் மூன்று சபைகளிலும் உறுப்பினர் என்ற பெரிமைக்குரியவரும், மகாத்மா காந்தி,பண்டித ஜவஹர்லால் நேரு, சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர், கர்மவீரர் காமராஜர் என மூத்த அரசியல் தலைவர்களுடன் இணைந்து தேசிய அரசியலில் பயணித்தவரும், நாமக்கல் மண்ணின் மைந்தருமான கர்மயோகி டி.எம். காளியண்ணன் ஐயா அவர்களது 105வது ஆண்டு பிறந்த தின விழா தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஜனவரி 10-ஆம் தேதி (சனிக்கிழமை) அன்று காலை 9.30 மணியளவில் நாமக்கல்- மோகனூர் சாலை சந்திப்பு அண்ணா சிலை அருகே கொண்டாடப்பட உள்ளது. அதுசமயம் அனைவரும் நேரில் வந்து கலந்து கொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் அந்த செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Next Story