கோவில் வளாகத்தில்: 10 முட்டைகளுடன் சிக்கிய 12 அடிக்கொண்ட மிகப்பெரிய இராட்சத மலைப்பாம்பு

திருவள்ளூர் மாவட்டம் பெண்ணாலூர் பேட்டை திரு கோவிலில் சிக்கிய 12 அடிக்கொண்ட மிகப்பெரிய மலைப்பாம்பு
10 முட்டைகளுடன் சிக்கிய 12 அடி மலைப்பாம்பு கிராம மக்கள் தகவலில் மீட்ட வனத்துறையினர் திருவள்ளூர் மாவட்டம் பெண்ணாலூர் பேட்டை கோவில் வளாகத்தில் பதுங்கி இருந்த சுமார் 12 அடி நீளம் உள்ள மலைப்பாம்பு 10 முட்டைகளுடன் அடைகாத்து வந்ததை கிராம மக்கள் அளித்த தகவலின் பேரில் அங்கு வந்த வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர் திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள பென்னாலூர் பேட்டை ஆந்திர மாநிலத்தை ஒட்டிய வனப்பகுதி இங்குள்ள ஆஞ்சநேயர் கோவிலில் சத்திரம் ஒன்று பயன்படுத்தப்படாமல் இருந்து வந்தது இந்த நிலையில் அதில் சவுக்கு கட்டைகள் தென்னை ஓலைகள் போன்றவற்றை வைத்திருந்தனர் அதில் பதுங்கிய 12 அடி நீளம் உள்ள மலைப்பாம்பு ஒன்று பத்து முட்டைகளை இட்டு அடைகாத்து வந்தது இதனை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து இதுகுறித்து செங்குன்றம் வனச்சரக அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர் வணச்சர அலுவலர் கிளமெண்ட் எடிசன் தலைமையில் சத்யராஜ் பாம்பு பிடி வீரர் ஆனந்தன் ஆகியோர் பென்னாரூர்பேட்டை ஆஞ்சநேயர் கோவிலுக்கு வந்து 12 அடி நில ராட்சச மலைப்பாம்பை பத்திரமாக மீட்டு 10 மலைபாம்பு முட்டைகளையும் கைப்பற்றினர் பின்னர் அதனை ஊத்துக்கோட்டை அருகே உள்ள மயிலாப்பூர் காப்பு காட்டுக்கு கொண்டு சென்று பத்திரமாக மலைப்பாம்பை அடை காக்க வைத்துள்ளனர் அருகில் உள்ள காப்பு காடு பகுதியில் மலைப்பாம்பு ஒரு மாதத்துக்கு முன்பு ஆஞ்சநேயர் கோவில் வளாகத்தில் சென்று இருக்க வேண்டும் என்றும் மூன்று நாட்களில் 10 முட்டைகளில் இருந்தும் பாம்பு குட்டிகள் வெளியே வருவதற்கு வாய்ப்பு உள்ளது என்று வனச்சரக அலுவலர் கிளமெண்ட் தெரிவித்துள்ளார் இந்த நிலையில் அப்பகுதியில்வேறு மலைப்பாம்பு ஏதேனும் இருக்குமோ என அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
Next Story