ராசிபுரம் அருகே கொல்லிமலைக்கு வழி கேட்பது போல் இருசக்கர வாகனத்தில் வந்த தம்பதியினரிடம் 10 பவுன் தங்கச் சங்கிலி வழிப்பறி. 2 இளைஞர்களை தர்ம அடி கொடுத்து காவலர்களிடம் ஒப்படைப்பு.

ராசிபுரம் அருகே கொல்லிமலைக்கு வழி கேட்பது போல் இருசக்கர வாகனத்தில் வந்த தம்பதியினரிடம் 10 பவுன் தங்கச் சங்கிலி வழிப்பறி. 2 இளைஞர்களை தர்ம அடி கொடுத்து காவலர்களிடம் ஒப்படைப்பு.
X
ராசிபுரம் அருகே கொல்லிமலைக்கு வழி கேட்பது போல் இருசக்கர வாகனத்தில் வந்த தம்பதியினரிடம் 10 பவுன் தங்கச் சங்கிலி வழிப்பறி. வழிப்பறி செய்த 2 இளைஞர்களை தர்ம அடி கொடுத்து காவலர்களிடம் ஒப்படைத்த கிராமமக்கள்...
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் கோனேரிப்பட்டி பகுதியைச் சேர்ந்த ராஜா(57),கெஜலட்சுமி(52) தம்பதியினர் பூ மற்றும் சாக்கு வியாபாரம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் தம்பதியினர் செம்மாம்பட்டி பகுதியில் உள்ள குலதெய்வ கோவிலான வீரமாத்தி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் முடித்துவிட்டு ராசிபுரத்தை நோக்கி வந்து கொண்டிருந்தனர். அப்போது அணைப்பாளையம் அருகே சென்ற போது ஹீரோ ஸ்ப்ளெண்டர் இருசக்கர வாகனத்தில் வந்த 2 இளைஞர்கள் தம்பதியினரின் வாகனத்தை மறித்து கொல்லிமலைக்கு எந்த வழியாக செல்ல வேண்டும் என வழி கேட்டுள்ளனர். அப்போது அந்த தம்பதியினர் வழி கூறிக் கொண்டிருந்தபோது பின் இருக்கையில் அமர்ந்து இருந்த தங்கராஜ் என்ற நபர் கெஜகலட்சுமி அணிந்திருந்த 10பவுன் தாலிச் சங்கிலியை பறித்துள்ளனர். தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு அங்கிருந்து இளைஞர்கள் செல்லவே, தம்பதியினர் திருடர் திருடர் என கூச்சலிட்டுனர். இதனால் அக்கம் பக்கத்தினர் மற்றும் எதிர் திசையில் வந்த நபர்கள் இருசக்கர வாகனதை பின்தொடர்ந்து இளைஞர்களை விரட்டிச் சென்றுள்ளார். அப்போது வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களின் எதிர் திசையில் வந்த வேன் ஒன்று கொள்ளையர்களின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் கீழே விழுந்தனர்.பின்னர் பொதுமக்கள் இருவரையும் மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்து ராசிபுரம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே சம்பவ இடத்திற்கு வந்த காவல் உதவி ஆய்வாளர் கீதா மற்றும் காவலர்கள் வழிப்பறியில் ஈடுபட்ட 2 இளைஞர்களையும் வாகனத்தில் ஏற்றி ராசிபுரம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் ஆட்டையாம்பட்டி பகுதியை சேர்ந்த மாணிக்கம் என்பவர் மகன் பைந்தமிழன்(24) மற்றும் தீர்த்தகிரி என்பவரது மகன் தங்கராஜ்(28) என்பது தெரிய வந்தது. இருவரும் தமிழ் இன்ஜினியர் சர்வேயர் என்ற கட்டுமான தொழில் நடத்தி வருவதாக கூறப்படும் நிலையில் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாகவும் அதனால் வழிப்பறியில் ஈடுபட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் இருசக்கர வாகனத்தில் வந்த வழிப்பறிக் கொள்ளையர்கள் தங்களது இருசக்கர வாகனத்தில் உள்ள நம்பர் பிளேட்டில் உள்ள 2 நம்பர்களை அளித்து வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் எடுத்து வந்து, மேலும் இந்த இளைஞர்கள் வேறு ஏதேனும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்களா என்பது குறித்து தொடர்ந்து ராசிபுரம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வழி கேட்பது போல் தம்பதியினரை வழிமறைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட பட்டதாரி இளைஞர்களை பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து காவலர்களிடம் ஒப்படைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.. பேட்டி:முத்துசாமி(70) திருடர்களை வழி மறைத்து பிடித்தவர் கூறுகையில், தம்பதியினர் திருடர்கள் என கூச்சலிட்டதாகவும் அதனைத் தொடர்ந்து நான் கொள்ளையர்களின் வாகனத்தை பின்தொடர்ந்து சென்றதாகவும் அப்போது இளைஞர்கள் தனது காலில் விழுந்து தன்னிடம் மன்னித்து விடுங்கள் என கூறியதாகவும் தெரிவித்தார். நான் 2 இளைஞர்களையும் பிடித்துக் கொள்ளவே பின்னர் அக்கம் பக்கத்தினர் வந்து அவர்களை பிடித்ததாக தெரிவித்தார். முதியவர் எதற்கும் அஞ்சாமல் 2 வழிப்பறி கொள்ளையர்களை பிடித்த முதியவரை அப்பகுதி மக்கள் மற்றும் பாதிக்கப்பட்ட தம்பதியினர் வெகுவாக பாராட்டி மனமார்ந்த நன்றியை தெரிவித்தனர்...
Next Story