குள்ளஞ்சாவடி: 10 வகுப்பறை, 2 ஆய்வகம், 5 கழிப்பறை திறப்பு

X
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியம் வழுதலம்பட்டு ஊராட்சி குள்ளஞ்சாவடி அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூபாய் 167.16 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள 10 கூடுதல் வகுப்பறைக் கட்டடம், 2 ஆய்வகம்,5 கழிப்பறைக் கட்டிடங்களை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் திறந்து வைத்தார். உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ர.அ.பிரியங்கா மற்றும் அரசு அலுவலர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
Next Story

