குமரியில் 10-ம் வகுப்பில் 21,106 பேர் தேர்ச்சி

X
தமிழகத்தில் எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. குமரி மாவட்டத்தில் 435 பள்ளிகளை சேர்ந்த 21,835 மாணவிகள் தேர்வு எழுதியதில் 21,106 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விழுக்காடு 96.66 சதவீதமாகும். 236 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளது. மாணவர்கள் 10874 பேர் தேர்வில் 10,336பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விழுக்காடு 95.05சதவீதமாகும். மாணவிகள் 10961 பேர் தேர்வு எழுதியதில் 10,770 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விழுக்காடு 98.26 சதவீதமாகும். மாணவர்களை விட மாணவிகள் அதிகளவு தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விழுக்காட்டில் குமரி மாவட்டம் தமிழக அளவில் 4-வது இடத்தை பிடித்துள்ளது. அரசு பள்ளிகளை பொருத்தமட்டில் 136 பள்ளிகளைச் சேர்ந்த 6203 மாணவ மாணவர்கள் தேர்வு எழுதியதில் 5922 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விழுக்காடு 95.47 சதவீதமாகும். அரசுபள்ளிகளில் 65 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளது. 3214 மாணவர்கள் தேர்வு எழுதியதில் 3006 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விழுக்காடு 93.53 சதவீதமாகும்.2989மாணவிகள் தேர்வு எழுதியதில் 2916 பேர் தேர்ச்சி பெற்றுள்ளன. தேர்ச்சி விழுக்காடு 97.56 சதவீதம் ஆகும். அரசு பள்ளிகளில் தமிழக அளவில் மூன்றாம் இடத்தை பிடித்து குமரி மாவட்டம் சாதனை படைத்துள்ளது.
Next Story

