அண்ணாமலை பெயரை கூறி ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டல் – 3 பேர் மீது வழக்கு பதிவு!

அண்ணாமலை பெயரை கூறி ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டல் – 3 பேர் மீது வழக்கு பதிவு!
X
விபத்தில் இறந்த வாலிபரின் குடும்பத்தினரிடம் பணம் கோரி மிரட்டிய குற்றச்சாட்டு.
விபத்தில் உயிரிழந்த வாலிபரின் குடும்பத்தினரிடம் பா.ஜனதா முன்னாள் தலைவர் அண்ணாமலை பெயரை கூறி ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டியதாக 3 பேருக்கு எதிராக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அன்னூர் குமாரபாளையத்தைச் சேர்ந்த திருமூர்த்தி (26) கடந்த ஆண்டு சாலை விபத்தில் உயிரிழந்தார். இதையடுத்து அவரது குடும்பத்துக்கு காப்பீட்டு தொகையாக ரூ.50 லட்சம் கிடைத்தது. இந்த தகவலை அறிந்த பா.ஜனதாவைச் சேர்ந்த கோகுல் கண்ணன், சாமிநாதன், ராசுகுட்டி ஆகியோர், “அண்ணாமலை பெயரில் உதவி செய்தோம்” என்று கூறி ரூ.10 லட்சம் கட்டாயப்படுத்தி பெற்றதாகவும், தற்போது மீண்டும் தேர்தல் செலவுக்காக மேலும் ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டுவதாகவும் குடும்பத்தினர் புகார் அளித்தனர். அந்நிகழ்வு தொடர்பாக அன்னூர் போலீசார் மூவருக்கும் எதிராக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story