சிவன்மலை திருமண வீட்டில் காரில் வைத்திருந்த 10 பவுன் நூதன திருட்டு - 3 நாட்களில் 2 திருடர்களை பிடித்த காவல்துறை
Kangeyam King 24x7 |11 Sep 2024 3:29 AM GMT
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் சிவன்மலை அருகே தனியார் திருமண மண்டபத்தில் விலையுயர்ந்த காரில் வந்து நூதன முறையில் 10 பவுன் தங்க நகையை திருடிய இரண்டு பேரை பிடித்து நகையை மீட்டு சிறையில் அடைத்த காங்கேயம் காவல்துறை.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே சிவன்மலை கிரிவல பாதையில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு குண்டடம் ருத்தரவாதி கரிச்சிக்காட்டுபுதூரை சேர்ந்த உறவினர் சோபனா தேவி (வயது 36 ) திருமணத்திற்கு முன்தினம் 4ம் தேதியிலிருந்து இருந்து கலந்துகொண்டிருந்தார். இந்நிலையில் 5ம் தேதி மதியம் திருமண விழா முடிவடைந்த நிலையில் வீட்டிற்கு செல்ல அவருடைய பேக்குகள், ஹேண்ட் பேக், கட்டை பைகள் போன்றவற்றை குவாலிஸ் காரில் வைக்கின்றார். இதில் நகை, பணம் ஆகியவைகள் இருந்துள்ளது. இந்நிலையில் அதே திருமண மண்டபத்தில் விலையுயர்ந்த காரில் உள்ளவர்கள் நோட்டம் இடுகின்றனர். பின்னர் சோபனாதேவி தங்களுடைய காரில் வைத்துவிட்டு மீண்டும் திருமண மண்டபத்திற்கு செல்ல முற்படும்போது இடையிலேயே உறவினரிடம் பேசி கொண்டுள்ளார் அப்போது விலையுயர்ந்த காரில் இருந்து ஒருவர் இறங்கி ஷோபனா தேவியின் காரின் பக்கத்திற்கு சென்று காரின் கதவை திறந்து சோபனாதேவியின் ஹேண்ட் பேக்கிலிருந்து 10 பவுன் நகையை மட்டும் எடுத்து கொண்டு காரில் தப்பிச் செல்கின்றனர் . பின்னர் சோபனாதேவி அவருடைய விட்டிருக்கு சென்று பார்த்தபோது ஒரு நகை மட்டும் காணவில்லை மண்டபத்தில் தொலைத்துவிட்டோமோ என்று எண்ணி பின்னர் திருமண மண்டபத்திற்கு வந்து தேடி பார்த்து விட்டு பின்னர் சிசிடிவி காட்சியை பார்த்த போது விலையுயர்ந்த காரில் வந்து நூதன திருட்டில் ஈடுபட்டதை கண்டு அதிர்ச்சியடைந்தார் . பின்னர் காங்கேயம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. மேலும் இந்த திருட்டு சம்பவத்தில் எத்தனை பேர் ஈடுபட்டுள்ளனர். எப்படி திருமண மண்டபத்திற்குள் அந்த கார் வந்து காத்திருந்தது. இல்லை இந்த திருட்டு சம்பவம் திட்டம் போட்டு நடைபெற்றதா?. திருட்டு சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட காரின் எண் என்ன? என பல்வேறு கோணங்களில் காங்கேயம் காவல் துணை கண்காணிப்பாளர் மாயவன் தலைமையில், காங்கேயம் காவல் ஆய்வாளர் விவேகானந்தன் மேற்பார்வையில் உதவி ஆய்வாளர் கார்த்திக் குமார்,தேவராஜ் உட்பட காவல்துறையினர் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று காங்கேயம் பகுதியில் வாகன சோதனை மேற்கொண்டபோது (MARUTI SUZUKI BREZZA) பிரிசா காரில் வந்த இருவரை விசாரணை மேற்கொண்ட போது இருவரும் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளார். இதை அடுத்து இருவரிடமும் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டதில் இவர்கள் இருவரும் ராசிபுரத்தை சேர்ந்த மணிகண்டன் (42),ரவிக்குமார் (37) என்பதும் இவர்கள் இருவரும் தான் திருமண மண்டபத்தில் 10 பவுன் நகையை நூதன முறையில் திருடி சென்றது தெரியவந்தது. மேலும் திருடப்பட்ட நகை மீட்டு திருட்டுக்கு பயன்படுத்திய காரை பறிமுதல் செய்து பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Next Story