கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 10 ஆண்டு 4 மாதங்கள் சிறை

X
திண்டுக்கல் மாவட்டம் அம்பாத்துரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2023-ஆம் ஆண்டு வெள்ளோடு பகுதியை சேர்ந்த சமாதான பிரபு (38) என்பவரை அவரது தம்பி சாம்சன் (35) என்பவர் அரிவாளால் வெட்டி கொலை முயற்சி செய்த வழக்கில் அம்பாத்துரை காவல் நிலைய போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் அறிவுறுத்தலின்படி அம்பாத்துரை காவல் நிலைய ஆய்வாளர் வசந்தகுமார், நீதிமன்ற தலைமை காவலர் திருமுருகன் மற்றும் அரசு வழக்கறிஞர் குமரேசன் சீரிய முயற்சியால் இன்று 22.04.2025-ம் தேதி திண்டுக்கல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி அவர்கள் குற்றவாளி சாம்சன் என்பவருக்கு 10 ஆண்டு 4 மாதங்கள் சிறை தண்டனை மற்றும் ரூ.9,000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்கள்.
Next Story

