சாத்தூர் அருகே தாயில்பட்டியில் இயங்கி வந்த பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து 10 க்கும் மேற்பட்ட அறைகள் தரைமட்டம்,ஒருவர் பலி 4 பேர் படுகாயம்*

X

சாத்தூர் அருகே தாயில்பட்டியில் இயங்கி வந்த பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து 10 க்கும் மேற்பட்ட அறைகள் தரைமட்டம்,ஒருவர் பலி 4 பேர் படுகாயம்*
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே தாயில்பட்டியில் இயங்கி வந்த பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து 10 க்கும் மேற்பட்ட அறைகள் தரைமட்டம்,ஒருவர் பலி 4 பேர் படுகாயம் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள தாயில்பட்டியில் இயங்கி வரும் ஹிந்துஸ்தான் என்ற பட்டாசு ஆலையில் இன்று காலை வெடிவிபத்து ஏற்பட்டது.இதனால் சுமார் 10 கி.மீ சுற்றளவில் உள்ள வீடுகள் அதிர்ந்தன.ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து ஆலையில் உள்ள அறைகள் வெடித்து சிதறியதால் மீட்பு பணிகள் தாமதமாகின.விபத்து குறித்து அறிந்த சிவகாசி மற்றும் சாத்தூர் தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.இந்த வெடிவிபத்தில் ஒருவர் பலியானார்.பலத்த காயமடைந்த 4 பேர் மீட்கப்பட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.10 க்கும் மேற்பட்ட அறைகள் தரைமட்டமாயின. இந்த விபத்தில் மேலும் தொழிலாளர்கள் பலியாகி உள்ளனரா என்று கட்டிட இடிபாடுகளை அகற்றி மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விபத்து குறித்து தாயில்பட்டி போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story