திருப்பத்தூர் மாவட்டம்10 வகுப்பு தேர்ச்சி விகிதம் 92.86_கடந்த ஆண்டைவிட பின்தங்கி உள்ளது

X
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்டத்தில் 10ம் வகுப்பில் 92.86 % தேர்ச்சி பெற்று கடந்த ஆண்டை விட மாவட்ட தரவரிசை அடிப்படையில் 34 இடத்திலிருந்து 22 வது இடத்திற்கும் 11 ம் வகுப்பில் 91.84% தேர்ச்சி பெற்று 31 வது இடத்திலிருந்து 29 வது இடத்திற்கும் முன்னேற்றம் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தகவல். தமிழகம் முழுவதும் 10 மற்றும் 11ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகிய நிலையில்... திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள், அரசு பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் என மொத்தம் 15826 மாணவ மணவிகள் 10 ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியிருந்தனர். அதேபோல் 11ம் வகுப்பில் 14009 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 10ம் வகுப்பில் 7269 மாணவிகள் 95.47 %த்திலும் 7004 மாணவர்கள் 90.29% த்திலும் என மொத்தம் 14271 மாணவ மாணவிகள் 92.86 %த்தில் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதேபோல் 11 ம் வகுப்பில் 5816 மாணவர்கள் 88.73% த்திலும் 6808 மாணவிகள் 94.69% த்திலும் என மொத்தம் 12624 மாணவ மாணவிகள் 91.84% த்தில் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம் போல மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில் மாவட்ட தர வரிசை அடிப்படையில் திருப்பத்தூர் மாவட்டம் கடந்த ஆண்டை விட 10ம் வகுப்பில் 34வது இடத்திலிருந்து 22வது இடத்திற்கும் 11ம் வகுப்பில் 31வது இடத்திலிருந்து 29 வது இடத்திற்கும் முன்னேறி இருப்பதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புண்ணியக் கோடி தகவல் தெரிவித்துள்ளார்.
Next Story

