எஸ்.வாழவந்தியில் 100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடு நடப்பதாக ஊராட்சி மன்ற தலைவர் குற்றச்சாட்டு.
Paramathi Velur King 24x7 |16 Aug 2024 12:51 PM GMT
பரமத்திவேலூர் அடுத்து எஸ்.வாழவந்தி கிராமசபை கூட்டத்தில்100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடு நடப்பதாக ஊராட்சி மன்ற தலைவர் புகார் தெரிவித்து கிராமசபை கூட்டத்தை ரத்து செய்ததால் பரபரப்பு.
பரமத்திவேலூர், ஆக.17- பரமத்தி வேலூர் அருகே உள்ள எஸ்.வாழவந்தியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் குப்புசாமி தலைமை வகித்தார். மோகனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகப் பணியாளர் முகமது பாஷா முன்னிலையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் வரவு செலவு கணக்குகள் வாசிக்கப்பட்டது. அப்போது கிராமசபை கூட்டத்தில் கூடியிருந்த பொதுமக்கள் 100 நாள் வேலை திட்டத்தில் ஆட்களை கொண்டு பணி செய்யாமல் ஜே.சி.பி இயந்திரங்களைக் கொண்டு பணிகள் செய்யப்பட்டு வருவதாக குற்றம் சாட்டினர். இது குறித்து எஸ். வாழவந்தி ஊராட்சி மன்ற தலைவர் எஸ். வாழவந்திக்கு ஒதுக்கப்பட்ட புதிய தார் சாலை பணியை அதிகாரிகள் அருகில் உள்ள ஊராட்சிக்கு மாற்றி விட்டனர். எஸ். வாழவந்திக்கு வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தொடர்ந்து புறக்கனிப்பதால் ஊராட்சி மன்ற தலைவராக பதவி ஏற்ற காலத்தில் இருந்து இது வரை பொதுமக்களுக்கு எந்த பணிகளையும் செய்யமுடியவில்லை. 100 நாள் வேலை திட்டத்தில் தொடர்ந்து முறைகேடு நடைபெற்று வருகிறது. 100 திட்டப் பணிகளை பணியாளர்களை கொண்டு செய்யாமல் ஜே.சி.பி மூலம் செய்து மோசடி செய்து வருகின்றனர். தமிழக முதல்வர் மற்றும் மாவட்ட கலெக்டர் ஆகியோர் இந்த மோசடிக்கு காரணமானர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் வரை கிராம சபை கூட்டம் நடைபெறாது என கூறி கிராம் சபை கூட்டம் ரத்து செய்யப்படுவதாக ஊராட்சி மன்ற தலைவர் அங்கிருந்து சென்று விட்டார். அதனையடுத்து பொதுமக்களும் தலைவரின் செயலுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
Next Story