லாரி மோதி 100 நாள் பணியில் ஈடுபட்டிருந்த பெண் உயிர் இழந்த சோகம்
Tiruvallur King 24x7 |22 Aug 2024 10:42 AM GMT
திருவள்ளூர் அருகே உள்ள கைவண்டூர் கிராமத்தில் செயல்படும் மண் குவாரியில் விதிமுறை மீறல் :லோடு ஏற்ற வந்த லாரி மோதி 100 நாள் பணியில் ஈடுபட்டிருந்த பெண் உயிரிழந்த சோகம் ஆத்திரமடைந்த கிராம மக்கள் லாரியின் கண்ணாடியை உடைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் :
திருவள்ளூர் அருகே உள்ள கைவண்டூர் கிராமத்தில் செயல்படும் மண் குவாரியில் விதிமுறை மீறல் :லோடு ஏற்ற வந்த லாரி மோதி 100 நாள் பணியில் ஈடுபட்டிருந்த பெண் உயிரிழந்த சோகம் ஆத்திரமடைந்த கிராம மக்கள் லாரியின் கண்ணாடியை உடைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் : மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் அடித்து உதைத்து போக்குவரத்தை சரி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரகம் அருகே உள்ள கைவண்டூர்கிராம ஏரியில் ஊராட்சி மன்ற தலைவர் சௌக்கர் பாண்டியன் அனுமதியோடு கனிம வளத் துறையினர் முறையாக ஆய்வு செய்யாமல் பல லட்சம் ரூபாய் செலவில் போடப்பட்ட புதிய கிராம சாலைகள் பாதிக்கும் விதத்தில் சவுடு மண் எடுக்க உரிய முறையில் ஆய்வு செய்யாமல் அனுமதி அளித்துள்ளனர். இந்த நிலையில் திருப்பாச்சூர் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும் அதை பொருட்படுத்தாமல் பழைய திருப்பாச்சூர் பகுதி சுடுகாட்டை ஒட்டிய குறுகிய பாதையில் 100 நாள் பணி நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் அவ்வழியாக மண் லாரிகளை இயக்கினர் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த திருப்பாச்சூர் கோட்டைமேடு காலனி சார்ந்த கர்ணன் என்பவரின் மனைவி வள்ளியம்மாள் 55 வயது பணி செய்து கொண்டிருப்பதை கவனிக்காமல் வேகமாக மண் குவாரியை நோக்கிச் சென்ற லாரி மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் வேலை செய்து வந்த வள்ளியம்மாள்(59) என்பவர் மீது சவுடு லோடு லாரி ஏறியதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். சுமார் 2 மணி நேரமாக சடலத்தை மீட்க வராத காவல்துறையினர் மற்றும் வருவாய்த் துறையினரை கண்டித்து கிராம மக்கள் கடம்பத்தூர் வழியாக பேரம்பாக்கம் தக்காளம் காஞ்சிபுரம் சொல்லக்கூடிய வாகனங்களையும் கைவண்டூர் கிராம ஏரியில் செயல்படும் மண் குவாரியில் இருந்து வந்த லாரியால் விபத்து ஏற்பட்டு ஒரு பெண் உயிரிழந்ததையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து இயங்கி வந்த மண்லோடு லாரிகளை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அங்கு வந்த திருவள்ளூர் காவல்துறையினர் இறந்து போன வள்ளியம்மாள் சடலத்தை கைப்பற்றி திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து போக்குவரத்துக்கு இடையூறாக ஆட்டோ ஒன்றை சாலையின் குறுக்கே நிறுத்தி வைத்திருந்ததை ஆட்டோவை அகற்றி காவல் ஆய்வாளர் ஸ்டாலின் உள்ளிட்ட போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களை அடித்து விரட்டினர் மணலாரி மோதி 100 நாள் பணியில் ஈடுபட்டிருந்த பெண் லாரியின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவத்தால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு மறியல் செய்தது அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது
Next Story