கபிலர்மலை வட்டாரத்தில் சொட்டு நீர் பாசசனம் அமைக்க 100% மானியம்.

கபிலர்மலை வட்டாரத்தில் சொட்டு நீர் பாசசனம் அமைக்க 100% மானியம்.
ஏழுமலை வட்டாரத்தில் சொட்டுநீர் பாசனம் 100% மானியம் தோட்டக்கலைத் துறை அறிவிப்பு.
பரமத்தி வேலூர்,ஆக,29:- பரமத்தி வேலூர் தாலுகா, கபிலர்மலை வட்டார தோட்டக்கலைத்துறை சின்னத்துரை செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:-  கபிலர்மலை வட்டாரத்தில் நடப்பு ஆண்டில்  சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 5 ஏக்கர் வரை நுண்ணீர் பாசனம் அமைத்திட 100 சதவீத மானியத்திலும் பெரும் விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தின் மூலம் அமைத்துக் கொள்ளலாம். ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி மற்றும் பெண் விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். சொட்டு நீர் பாசனம் அமைக்க பாஸ்போர்ட் அளவு புகைப்படம், சிட்டா. அடங்கல், நில வரைபடம். குடும்ப அட்டை நகல், மண் மற்றும் நீர் ஆய்வு அறிக்கை, ஆதார் அட்டை நகல் வங்கி கணக்கு புத்தகம் நகல், சிறு மற்றும் குறு விவசாயி சான்றிதழ் ஆகிய ஆவணங்களை கபிலர்மலை வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தில் வழங்கி முன்பதிவு செய்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் விவசாயிகளுக்கு துணை நீர் மேலாண்மை திட்டத்தின் கீழ் மெயின் பைப் லைன் அமைக்க அதிகபட்ச மானியமாக ரூ.10 ஆயிரம் புதியதாக பயன்பாட்டிற்கு கொண்டு வரும் கிணறு அல்லது போர் வெல்லில் மின்மோட்டார் பொருத்திக் கொள்ள ரூ.15 ஆயிரம் மற்றும் பாசனத்திற்காக நீர் சேகரிப்பு அமைப்பு 116 கனமீட்டர் அளவில் அமைத்திட மானியமாக ரூ.75 ஆயிரம்  வழங்கப்படும் என செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.
Next Story