உபரி நீர் செல்லும் வாய்க்காலில் ஏற்பட்ட அடைப்பு.100 ஏக்கர் நிலப்பரப்பில் தேங்கிய மழைநீரால் அழுகும் நிலையில் நெற்பயிர்கள்
Periyakulam King 24x7 |4 Nov 2024 5:33 AM GMT
நெற்பயிர்
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கீழ வடகரை ஊராட்சி பகுதியில் உள்ள ஆண்டி குளம் வெளியேறும் உபரிநீர்கள் அப்பகுதியில் உள்ள உருட்டி குளத்துக்கு வருகிறது இந்நிலையில் தொடர் கன மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து உருட்டி குளம் முழுவதும் நிரம்பி உபரி நீர் வெளியேற முடியாத சூழ்நிலை உள்ளதாகவும் மேலும் உருட்டி குளத்தில் உபரி நீர் செல்லும் வாய்க்கால் முற்றிலும் அடைக்கப்பட்டுள்ளதால் தண்ணீர் வெளியேற முடியாமல் விளைநிலங்களுக்குள் புகுந்து நடவு செய்த நெல் பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளனர் மேலும் இப்பகுதியில் சுமார் 100 ஏக்கருக்கு மேலாக நெல் பயிர் இரண்டு தினங்களுக்கு முன்பு நடவு செய்த நிலையில் தொடர் மழை காரணமாக உருட்டி குளத்தில் இருந்து நீர் வெளியேற முடியாமல் நடவு செய்த நெல் பயிர் நிலத்துக்குள் புகுந்ததால் நடவு செய்த நெல் பயிர் அழுகும் சூழ்நிலையில் உள்ளது மேலும் இது குறித்து அப்பகுதியில் விவசாயிகள் பலமுறை பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் ஆண்டுதோறும் மழைக் காலங்களில் உருட்டி குளத்தில் இருந்து உபரி நீர் வெளியே செல்ல முடியாமல் விலை நிலங்களுக்குள் வருவதால் முற்றிலும் நடவு செய்யும் நெல் பயிர்கள் சேதம் அடைவதாக அப்பகுதி நெல் விவசாயிகள் தெரிவித்துள்ளனர் இதனால் உடனடியாக தமிழரசு சார்பாக உடனடியாக சேதம் அடைந்த நெல் பயிர்களை பார்வையிட்டு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என நெல் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்
Next Story