கான்சாபுரம் ஊராட்சியில் 100 நாள் வேலையை முறையாக வழங்காததை கண்டித்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்...*
Virudhunagar King 24x7 |23 Dec 2024 3:43 PM GMT
கான்சாபுரம் ஊராட்சியில் 100 நாள் வேலையை முறையாக வழங்காததை கண்டித்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்...*
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கான்சாபுரம் ஊராட்சியில் 100 நாள் வேலையை முறையாக வழங்காததை கண்டித்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்... விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு ஊராட்சிக்கு உட்பட்ட கான்சாபுரம் ஊராட்சியில் 100 நாள் வேலையினை பொதுமக்களுக்கு முறையாக கொடுக்கவில்லை எனவும் இன்னும் வருடம் முடிய மூன்று மாதங்கள் மட்டுமே இருப்பதால் தங்களுக்கு இந்த வருடத்திற்கான 100 நாட்கள் வேலையை முறையாக வழங்க வேண்டும் 100 நாள் வேலை தற்போது வரை 20 நாட்கள் மட்டுமே வழங்கப்பட்டிருப்பதாகவும் இது குறித்து அரசு அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் அதிகாரிகள் தங்களுக்கு 100 நாள் வேலை ஒதுக்குவதில் பாரபட்சம் பார்ப்பதாக குற்றம்சாட்டி சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வட்டார வளர்ச்சி அலுவலர் மீனாட்சிக்கு தகவல் தெரிவித்தும் அலுவலகத்திற்கு வரத்தால் தங்களை நேரில் சந்தித்து கோரிக்கைகளை கேட்க்கும் வரையும் தங்களுக்கு உடனடியாக 100 நாள் வேலையினை வழங்க நடவடிக்கை எடுக்கும் வரையும் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு செல்ல போவதில்லை எனக்கூறி வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் முன்பு முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பேட்டி: செல்வி
Next Story