கடலூரில் செல்வ மகள் சிறுசேமிப்பு திட்டத்தில் 100 பெண் குழந்தைகளுக்கு அஞ்சலகத்தில் கணக்கு துவக்கம்

X
கடலூர் முன்னாள் பாரதப் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் நூறாவது பிறந்த நாளை முன்னிட்டு கடலூர் கிழக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பாக தமிழக பாரதிய ஜனதா கட்சி ஓபிசி மாநில தலைவர் சாய் சுரேஷ் தலைமையில் மற்றும் மாநிலத் துணைத் தலைவர். RKL. சிவா வழக்கறிஞர் முன்னிலையில் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் புதியதாய் 100 பெண் பிள்ளைகளுக்கு அஞ்சலகத்தில் கணக்கு துவங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பினர் விஸ்வநாதன் மாவட்ட செயலாளர் லோகு, கடலூர் நகரத் தலைவர் வேலு வெங்கடேசன், செந்தில், அருள், ஆகியோர் கலந்து கொண்டனர்.
Next Story

