*தடையை மீறி நடை பயணம் மேற்கொள்ள முயன்ற காவிரி- வைகை- குண்டாறு-பாசன விவசாயிகள் கூட்டமைப்பு சங்கத்தினர் 100 நபர்கள் மீது விருதுநகர் மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு*

X
தடையை மீறி நடை பயணம் மேற்கொள்ள முயன்ற காவிரி- வைகை- குண்டாறு-பாசன விவசாயிகள் கூட்டமைப்பு சங்கத்தினர் 100 நபர்கள் மீது விருதுநகர் மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு விருதுநகர் கௌசிகா மகா நதியில் கழிவுநீர் கலப்பு, தனியார் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரியும், 17400 ஏக்கர் பாசன வசதி பெறுவதற்கான குல்லூர்சந்தை, கோல்வார்பட்டி, இருக்கன்குடி அணைகளை புனரமைக்க வலியுறுத்தி 2 நாள் நடை பயணத்தை காவிரி- வைகை- குண்டாறு-பாசன விவசாயிகள் கூட்டமைப்பு சங்கத்தினர் முன்னெடுத்தனர். விவசாயிகளின் நடை பயணத்திற்கு விருதுநகர் மாவட்ட காவல்துறையினர் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் தடையை மீறி நடைபயணம் மேற்கொள்ள முயன்ற கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் ராம் பாண்டியன், பொதுச் செயலாளர் அர்ஜுனன், மாநிலத் தலைவர் மிசா.முத்து, மாநிலச் செயலாளர் ராம முருகன் உள்ளிட்ட 100 நபர்கள் மீது உரிய அனுமதி இன்றி சட்ட விரோதமாக குழுக்களாக கூடி சாலை மறியலில் ஈடுபட முயன்ற போது விருதுநகர் மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளார்.
Next Story

