பேரூர் ஆதீனம் சாந்தலிங்க இராமசாமி அடிகளாரின் 100-வது ஆண்டு பெருவிழா

X
பல்லடம் வனாலயத்தில் வனம் இந்திய அறக்கட்டளையின் வான்மழை மாதாந்திர கருத்தரங்கம் மற்றும் கோவை பேரூர் ஆதீனம் சாந்தலிங்க இராமசாமி அடிகளாரின் 100-வது ஆண்டு பெருவிழா ஆகியவை நடைபெற்றது. வனம் அமைப்பின் தலைவர் சுவாதி சின்னச்சாமி தலைமை தாங்கினார். வனம் செயல் தலைவர் பாலசுப்ரமணியம், ராம்ராஜ் காட்டன் நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் ஸ்கை சுந்தரராஜன் அனைவரையும் வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் கோவை பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாச்சல அடிகளார், செஞ்சேரிமலை ஆதினம் முத்து சிவ ராமசாமி அடிகளார், கோவை காமாட்சிபுரம் ஆதீனம் பஞ்சலிங்கேஸ்வரர் தம்பிரான் சாமிகள், வனம் அமைப்பின் பொருளாளர் விஸ்வநாதன், நிர்வாகிகள் சுந்தரமூர்த்தி, ஆனந்த கிருஷ்ணன், ஈஸ்வரமூர்த்தி, பழனிச்சாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருதுநகர் கலந்து கொண்ட குன்றக்குடி ஆதீனம் தெய்வசிகாமணி பொன்னம்பல தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் அருளாசி வழங்கினார்.
Next Story

