ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் ஒருவர் கைது

ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் ஒருவர் கைது
வேடசந்தூர் அருகே ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் ஒருவர் கைது
வேடசந்தூர் டிஎஸ்பி பவித்ராவுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில், இன்ஸ்பெக்டர் வேலாயுதம், எஸ்.ஐ. அங்கமுத்து தலைமையிலான தனிப்படை போலீசார், வேடசந்தூர் வடமதுரை ரோட்டில் தட்டாரபட்டி பிரிவு அருகே ரோந்து சென்றனர். அங்கே சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த, வடமதுரை ஒன்றியம் தென்னம்பட்டி எலப்பார்பட்டியைச் சேர்ந்த, சின்னகாளை மகன் சேகர் 40, என்பவர் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயற்சித்தார். அவரை மடக்கிப்பிடித்த போலீசார் அவரிடம் விசாரித்தபோது, முண்ணுக்குப் பின் முரணாக பேசினார். தொடர் விசாரணையில் அவர் வைத்திருந்த பையில், ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா இருந்தது தெரிந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், சேகரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Next Story