ஆம்ஸ்ட்ராங் பிறந்தநாளை முன்னிட்டு 100-க்கும் மேற்பட்டோர் ரத்ததானம் வழங்கினர்
திருத்தணி அரசு பொது மருத்துவமனையில் மறைந்த பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் பிறந்தநாள் முன்னிட்டு ரத்ததான முகாம் 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ரத்ததானம் வழங்க ஆர்வம் மறைந்த முன்னாள் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் 53 ஆண்டு பிறந்தநாள் முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அரசு பொது மருத்துவமனையில் இளைஞர்கள் சார்பில் ரத்ததானம் முகாம் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்ட ரத்த வங்கி சார்பில் நடைபெற்ற ரத்ததான முகாமில் இதில் திருத்தணி சுற்றுவட்டார பகுதியில் இருந்து 100-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு ரத்ததானம் செய்தனர். ரத்ததானம் செய்த இளைஞர்களுக்கு சான்றிதழ், ஆரஞ்சு சாத்துக்குடி ஜூஸ் கரும்பு ஜூஸ் வழங்கப்பட்டது. இம்மகாமில் 50 யூனிட் ரத்ததானம் பெறப்பட்டதாக மாவட்ட ரத்த வங்கி மருத்துவர் தெரிவித்தார்.
Next Story




