ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடியில் 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடியில் 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். தாளவாடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு கடந்த மூன்று மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என்றும், ஒன்றிய அரசை கண்டித்தும் பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் தாளவாடி அஞ்சல் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நூறு நாள் வேலை திட்ட தொழிலாளர் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் காளசாமி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் தாளவாடி ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த ஏராளமான சங்க நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
Next Story



