சேலத்தில் வெயிலின் அளவு நேற்று 100 டிகிரியை தாண்டியது.

சேலத்தில் வெயிலின் அளவு நேற்று 100 டிகிரியை தாண்டியது.
X
சுட்டெரிக்கும் வெயிலால் பொதுமக்கள் அவதி
சேலம் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் அவதியுற்று வருகின்றனர். சேலத்தில் நேற்று முன்தினம் வெயிலின் அளவு 97.2 டிகிரியாக இருந்தது. இந்த நிலையில் நேற்று காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. நேரம் செல்ல, செல்ல வெயில் படிப்படியாக அதிகரித்து சுட்டெரித்தது. சேலத்தில் வெயிலின் அளவு 100.6 டிகிரியாக பதிவாகி உள்ளது. இந்தாண்டு மார்ச் மாதம் தொடக்கத்திலேயே வெயிலின் அளவு 100 டிகிரியை தாண்டி உள்ளது. இதனால் வெயிலின் அளவு மேலும் அதிகரிக்க கூடும் என்பதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். வெயிலினால் பகல் மற்றும் இரவு நேரங்களில் வீடுகளில் புழுக்கம் அதிகமாக உள்ளது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வெப்பத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். வழக்கமாக கத்திரி வெயில் காலம் தொடங்கிய பிறகு தான் வெயிலின் அளவு 100 டிகிரியை தொடும். ஆனால் அதற்கு முன்பாகவே சேலத்தில் வெயிலின் அளவு 100 டிகிரியை தாண்டி உள்ளதால் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர்.
Next Story