திமுகவில் இருந்து விலகி தன்னுடன் கட்சியில் சேராத ஒரு நபரை பழிவாங்க 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் பகுதியை மட்டும் புறக்கணிப்பதாக பேரூராட்சி சேர்மன் மீது புகார்
தேனி அருகே பழனிசெட்டிபட்டி பேரூராட்சி பகுதிக்குட்பட்ட சூர்யா தெருவில் கடந்த 40 ஆண்டுகளாக வசித்து வருபவர் வினோத், இவர் மற்றும் இவரின் சகோதரர் பழனிசெட்டிபட்டி பேரூராட்சி தலைவர் மிதுன் சக்கரவர்த்திக்கு ஆதரவாக கட்சிப் பணிகளை செய்து வந்தனர் இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமமுகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்து கொண்டார் மிதுன் சக்கரவர்த்தி இதனால் அதிருப்தி அடைந்த வினோத் மற்றும் அவரது சகோதரர் மிதுன் சக்கரவர்த்தியிடம் இருந்து விலகினர், இதில் வினோத்தின் சகோதரர் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் திமுகவில் இணைந்து கொண்டு கட்சிப் பணிகளில் ஈடுபட்டு வந்தார் இதனால் ஆத்திரம் அடைந்த மிதுன் சக்கரவர்த்தி, வினோத் வசிக்கும் வீட்டிற்கு முறையாக அனுமதி பெறாமல் சில பகுதி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக கூறி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் வீட்டிற்கு நோட்டீஸ் ஒட்டி சென்றுள்ளதாக வினோத் குற்றச்சாட்டு தெரிவித்தார் இது குறித்து வினோத் கூறுகையில் பழனிசெட்டிபட்டி பேரூராட்சி சேர்மன் மிதுன் சக்கரவர்த்தி வெற்றி பெற தீவிரமாக உழைத்ததாகவும் தற்போது அவர் கட்சி மாறியதால் அவரிடமிருந்து விலகி திமுகவில் இணைந்ததாகவும் இதனால் திமுகவில் இருந்து விலகி தன்னுடன் சேர வேண்டும் என தொடர்ந்து வற்புறுத்தி பல்வேறு இன்னல்கள் கொடுத்து வருவதாக கூறுகிறார் பழனிசெட்டிப்பட்டியில் உள்ள 15 வார்டுகளில் தான் வசித்து வரும் தெருவை தவிர மற்ற அனைத்து தெருவிற்கும் சிமெண்ட் சாலை வசதிகள் போடப்பட்டுள்ளதாகவும் சூர்யா தெருவில் மட்டும் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக சாலை வசதிகளை மேற்கொள்ளாமல் குண்டும் குழியுமாக இருப்பதாகவும் இதனால் அடிக்கடி விபத்து ஏற்படுவதாகவும் அவசர தேவைக்கு கூட தெருவை கடந்து செல்வதில் பல்வேறு இன்னல்களை சந்திப்பதாகவும் இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகத்திடம் கேட்ட பேரூராட்சி தலைவர் சொல்வதை போல் திமுகவில் இருந்து விலகி அவர் இருக்கும் கட்சியில் சேர்ந்தால் தான் உங்களின் தேவைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என கூறியதாக குற்றச்சாட்டு தெரிவித்தார் எனவே இது குறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர் இதுகுறித்து விளக்கம் கேட்க பழனிச்சட்டிப்பட்டி பேரூராட்சி நிர்வாகத்தை தொடர்பு கொண்ட போது அவர்கள் அழைப்பை ஏற்கவில்லை
Next Story




