நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் கழுவந்தோண்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 100-ஆம் ஆண்டு ஆண்டு விழாவில் கோரிக்கை

நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் கழுவந்தோண்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 100-ஆம் ஆண்டு ஆண்டு விழாவில் கோரிக்கை
X
நடுநிலைப் பள்ளியை உயர்தலைப் பள்ளியாக தரம் உயர்த்த கழுவந்தோண்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 100-ஆம் ஆண்டுவிழாவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
அரியலூர், மார்ச்21- ஜெயங்கொண்டம் அருகே கழுவந்தோண்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 100 ஆம் ஆண்டு ஆண்டு விழா முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மகாலிங்கம் தலைமையில் நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு கொளஞ்சி, பலகுரல் கண்ணன், ஆகியோர் முன்னிலையில் அடித்தனர் சிறப்பு விருந்தினராக திருக்குறள் ஒரு ஞான மன்றம் பன்னீர்செல்வம், முன்னாள் டிஎஸ்பி ராஜேந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.விழாவில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு சிறப்பு செய்யப்பட்டது. பள்ளிக்கு சீர்வரிசையாக 2 லட்சம் மதிப்பிலான டிவி, ஸ்பீக்கர், பேன், ரேக், செல்ப் உள்ளிட்ட பொருட்களை வழங்கினர். அதனைத் தொடர்ந்து பள்ளிகளில் பல்வேறு கலை நிகழ்ச்சி போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.இதில் செங்குந்தபுரம் தலைமை ஆசிரியர் வேலுமணி ,ஊர் பொதுமக்கள் ஊர் முக்கியஸ்தர்கள், முன்னாள் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கழுவந்தோண்டி நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.மேலும் குறளர் திட்டத்தின் கீழ் பொதுமக்கள் நன்கொடை வழங்க கேட்டுக்கொள்ளப்பட்டது. முடிவில் பள்ளி தலைமை ஆசிரியர் லதா நன்றி கூறினார்.
Next Story