கரூரில் 100 நாள் வேலைத் திட்ட தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.

கரூரில் 100 நாள் வேலைத் திட்ட தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.
கரூரில் 100 நாள் வேலைத் திட்ட தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம். தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் 100 நாள் வேலைத்திட்டத்தில் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய நான்கு மாத கூலியை வழங்க வலுவிறுத்தி மாநிலம் தழுவிய அளவில் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு சங்கத்தின் மாவட்ட செயலாளர் தங்கவேல் தலைமையில் கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் சிபிஐ நாட்ராயன் மாவட்ட தலைவர் பாலன் மாவட்ட துணை தலைவர் அஞ்சலிதேவி உள்ளிட்ட மாவட்ட குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு, 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களை பழிவாங்காதே எனவும், 4- மாத சம்பள பாக்கி உடனே வழங்க வலியுறுத்தியும், வேலை மறுக்கப்பட்ட நாட்களுக்கு சட்டப்படி வேலையின்மைக்கான படி வழங்க வலியுறுத்தியும், ஒரு நாள் ஊதியத்தை 700 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் எனவும், ஓராண்டிற்கான வேலை நாட்களை 200 ஆக உயர்த்திடு வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
Next Story