மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு 100 நாள் வேலை திட்டத்திற்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை

மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு 100 நாள் வேலை திட்டத்திற்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை
X
உடனடியாக வழங்க வலியுறுத்தி தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்
நாகை மாவட்டம் திருமருகல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரில், தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் தமிழரசன், ஒன்றிய தலைவர் வரதராஜன், ஒன்றிய பொருளாளர் கோவிந்தராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட பொருளாளர் பாபுஜி, ஒன்றிய செயலாளர் சந்திரசேகர், விவசாய சங்க ஒன்றிய செயலாளர் தங்கையன், ஏஐடியுசி ஒன்றிய செயலாளர் தியாகராஜன் ஆகியோர், மத்திய அரசை கண்டித்து பேசினர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய 100 நாள் வேலை திட்டத்திற்கான நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். விவசாய தொழிலாளர்கள் அனைவருக்கும் 100 நாளும் வேலை வழங்க வேண்டும். 100 நாள் வேலை அட்டை வைத்துள்ள அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும். 100 நாள் ஊதியத்தை 700 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். முடிவில், ஒன்றிய துணை செயலாளர் ரமேஷ் நன்றி கூறினார்.
Next Story