தமிழக அரசுக்கு 100 நாள் சேலஞ்ச் செய்த ராசிபுரம் நகராட்சி நடுநிலை பள்ளி. பள்ளியில் மாணவ மாணவிகளின் திறனை சோதனை செய்து, பாராட்டிய பள்ளிக்கல்வி இணை இயக்குனர்...

X
Rasipuram King 24x7 |16 April 2025 6:33 PM ISTதமிழக அரசுக்கு 100 நாள் சேலஞ்ச் செய்த ராசிபுரம் நகராட்சி நடுநிலை பள்ளி. பள்ளியில் மாணவ மாணவிகளின் திறனை சோதனை செய்து, பாராட்டிய பள்ளிக்கல்வி இணை இயக்குனர்...
தமிழக அரசு சார்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் தமிழ், ஆங்கிலம்,கணக்கு வாசித்தல் பயிற்சி உள்ளிட்ட திறன்களை அதிகரிக்க பள்ளிகளில் 100 நாள் சேலஞ்ச் என திட்டமானது கொண்டுவரப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வி.நகர் பகுதியில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளியில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளி பயிலும் மாணவ மாணவிகள் தமிழக அரசுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு ஓபன் சேலஞ்ச் செய்துள்ளது.ஓபன் சேலஞ்ச் அடுத்து பள்ளிக் கல்வி இணை இயக்குனர் பொன் குமார் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளின் தனித்தனியாக அவர்களது படிப்பு திறன், பேச்சு,தமிழ்,ஆங்கிலம் உள்ளிட்ட தனித்திறமைகளை சோதனை செய்து மாணவ மாணவிகளுக்கு பாராட்டு தெரிவித்தார். நிகழ்வில் பள்ளி ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர்...
Next Story
