திருவள்ளூர் அடுத்த முன்னம்பாக்கம் கிராமத்தை சார்ந்த மூதாட்டி 100-வது பிறந்த நாள் கேக் வெட்டி கோலாகல கொண்டாட்டம்

திருவள்ளூர் அடுத்த முன்னம்பாக்கம் கிராமத்தை சார்ந்த மூதாட்டி 100-வது பிறந்த நாள் கேக் வெட்டி கோலாகல கொண்டாட்டம்
திருவள்ளுர்- திருவள்ளுர் அருகே 4 தலைமுறைகளைக் கண்ட மூதாட்டி :தனது பேரப்பிள்ளைகளுடன் இணைந்து 100-வது பிறந்தநாளை சாரட் வண்டியில் ஊர்வலமாக அழைத்துச் சென்று கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்த உறவுகள். திருவள்ளூர் அடுத்த புன்னப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் பொட்டியம்மாள் (100) இவரது கணவர் ஜெகநாதன் இவர்களுக்கு கடந்த 1925 ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இத்தம்பதிக்கு தயாளம் -76 ஜெயமணி-68 பண்ணீர் -65 சேகர் -63 கஸ்தூரி -64 விஜயன் -60 கிருபகரன் -59 சித்ரா -56 என 8 குழந்தைகள் பிறந்தனர். இவர்களில் தற்போது 3 மகள்கள் 1 மகன் உயிருடன் உள்ளனர். பாட்டியின் கணவர் ஜெகநாதன் 2019 ம் ஆண்டில் உயிரிழந்து விட்டார். பொட்டியம்மாள் மகன்கள், மகள்கள், பேரன்கள், பேத்திகள், கொள்ளுப் பேரன்கள், கொள்ளுப் பேத்திகள், எள்ளுப்பேரன்கள், எள்ளுப் பேத்திகள் என 50-க்கும் அதிகமான உறவுகளுடன் 4 தலை முறைகளை கடந்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் பொட்டியம்மாளின் 100 -வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட அவர்களது வாரிசுகள் முடிவு செய்தனர். இந்நிலையில் அவருக்கு இன்று 100 வயது நிரம்பியதை அடுத்து, உறவினர்கள் அவரின் பிறந்தநாளை வெகுவிமரிசையாக கொண்டாடினர் மூதாட்டி பொட்டியம்மாளை அலங்காரம் செய்த சாரட்டு வண்டியில் அமர வைத்து மேள தாளங்களுடன் பட்டாசுகள் வெடித்து பேரப்பிள்ளைகள் புடைசூழ ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். பாட்டியின் நூறாவது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அவர்களின் உறவினர்கள் அனைவரையும் அழைத்து, சிக்கன் பிரியாணி விருந்து வைத்து சிறப்பாக கொண்டாடினர். இதில் பாட்டியின் மகன்கள், மகள்கள், பேரப்பிள்ளைகள், கொள்ளுப்பேரன், எள்ளுப்பேரன் என நான்கு தலைமுறை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ள பாட்டி தனது 100 வது பிறந்தநாளை கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடினார் . இந்த நிகழ்வின் போது பொட்டியம்மாளிடம் பேரப்பிள்ளைகள் உறவினர்கள் ஆசி பெற்றனர். பின்னர் பொட்டியம்மாளுடன் இணைந்து பேரப்பிள்ளைகள் குழு புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்,
Next Story