அரசுப்பள்ளிகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளி ஆசிரியர்களுக்கு ஆட்சியர் சான்றுகள் வழங்கும் நிகழ்ச்சி.

அரசுப்பள்ளிகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளி  ஆசிரியர்களுக்கு  ஆட்சியர் சான்றுகள் வழங்கும் நிகழ்ச்சி.
X
10 மற்றும் 12ம் வகுப்பு அரசுப்பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஆரணி சுப்பிரமணிய சாஸ்திரியார் மேல்நிலைப்பள்ளியில் பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்
ஆரணியில் அரசுப்பள்ளிகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளி ஆசிரியர்களுக்கு ஆட்சியர் சான்றுகள் வழங்கும் நிகழ்ச்சி. 10 மற்றும் 12ம் வகுப்பு அரசுப்பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஆரணி சுப்பிரமணிய சாஸ்திரியார் மேல்நிலைப்பள்ளியில் பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். ஆரணி சுப்பிரமணிய சாஸ்திரியார் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் க.தர்ப்பகராஜ் சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கி சிறப்புரையாற்றியதாவது, 10 மற்றும் 12 ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு பாராட்டுகின்ற நிகழ்வு இன்றையதினம் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்விற்கு காரணமான ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு பள்ளிக்கல்வித்துறையில் அளப்பரிய திட்டங்களையும், ஆய்வு பார்வைகளையும், மெல்ல கற்கும் மாணவர்கள் மற்றும் இடைநின்ற மாணவர்களின் நலனில் கூடுதல் அக்கறைகள், துறையினை மேம்படுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்ற ஆண்டின் தேர்ச்சி சதவீதத்தை காட்டிலும் கூடுதலாக இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் பெற்று தந்தமைக்காக ஆசிரியர்களாகிய உங்களுக்கு எனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஆசிரியர் சமூகம் தான் இந்த சமூகத்தின் அடிப்படை கட்டமைப்பாகும். ஒரு மாணவனுக்கு மேடையில் வீற்றிருப்பதற்கான தகுதியை அளிப்பது ஆசிரியர் சமூகத்தினால் மட்டுமே. அந்தவகையில் தேர்ச்சி சதவிகிதத்தை உயர்த்தி கொடுத்த உங்களை ஊக்குவிப்பதற்காக பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அதேப்போல் இந்த கல்வியாண்டிலும் முழு ஒத்துழைப்புடன், உற்சாகத்துடன் செயல்பட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் பேசினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமி முத்தழகன், ஆசிரியர்கள் மற்றும் அரசு துறைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story