திருச்சி மாநகராட்சிக்கு ரூ.100 கோடி வருமானம்

திருச்சி மாநகராட்சிக்கு ரூ.100 கோடி வருமானம்
X
மாநகராட்சி கூட்டத்தில் திட்டம் தயார் என மேயர் அறிவிப்பு
திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டம் நேற்று மேயர் அன்பழகன் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தை மேயர் அன்பழகன் தொடங்கி வைத்து பேசியதாவது: திருச்சி பஞ்சப்பூரில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பஸ் முனையம் முன்மாதிரி பஸ் முனையமாக விளங்கி வருகிறது. இதனை பெரும் முயற்சி எடுத்து செயல்படுத்திய அமைச்சர் கே.என்.நேரு மற்றும் திறந்து வைத்த முதலமைச்சர் ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். திருச்சி மாநகராட்சியில் இதுவரை 23 ஆயிரத்து 89 நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டு்ளது. மேலும் 870 கால்நடைகள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ. 22 லட்சத்து 83 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அதன் உரிமையாளர்கள் பெற்றுச் செல்ல மறுத்த 51 கால்நடைகள் ஏலம் விடப்பட்டு அதன் மூலமாக ரூபாய் மூன்று லட்சம் மாநகராட்சிக்கு வருவாய் கிடைத்துள்ளது என்றார். திருச்சி மாநகராட்சியில் ஏராளமான புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதற்காக பொது நிதி அதிகம் செலவிட வேண்டி வருகிறது. தற்போது திருச்சி பஞ்சப்பூர் புதிய பஸ் நிலையம், காய்கறி அங்காடி,சரக்கு வாகன முனையம் மூலமாக வருடத்திற்கு ரூபாய் 100 கோடி மாநகராட்சிக்கு வருவாய் திரட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது .ஆகவே படிப்படியாக கடன் சுமை குறையும் என்றார்.
Next Story