மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் 100 நாள் வேலைத் திட்டத்தை உடனடியாக தொடங்க வேண்டும்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் 100 நாள் வேலைத் திட்டத்தை உடனடியாக தொடங்க வேண்டும்
X
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்டைக்காரன் இருப்பு கிளை மாநாட்டில் தீர்மானம்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கீழையூர் ஒன்றிய குழு சார்பில், நாகை மாவட்டம் கீழையூர் அடுத்த வேட்டைக்காரன் இருப்பு கிளை மாநாடு நேற்று நடைபெற்றது. மாநாட்டிற்கு, ஏ.கணேசன் தலைமை வகித்தார். கட்சியின் மாநில குழு உறுப்பினர் டி‌.செல்வம் மாநாட்டினை தொடங்கி வைத்து பேசினார். மாநாட்டினை வாழ்த்தி, கட்சியின் ஒன்றிய செயலாளர் எஸ்.காந்தி பேசினார். மாநாட்டில், தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் வீ.சுப்பிரமணியன், தமிழக விவசாய சங்க ஒன்றிய செயலாளர் எம்.ஹாஜா அலாவுதீன், ஒன்றிய பொருளாளர் எம்.பர்ணபாஸ் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். மாநாட்டில், புதிய கிளைச் செயலாளராக என்.சிவக்குமார்,துணைச் செயலாளராக மன்மதன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மாநாட்டில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் 100 நாள் வேலைத் திட்டத்தை உடனடியாக தொடங்க வேண்டும். வேட்டைக்காரன் இருப்பில் இருந்து பாலக்குறிச்சி வழியாக கீழ்வேளூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு நகர பேருந்து இயக்க வேண்டும். வேட்டைக்காரன் இருப்பு ஊராட்சிக்குட்பட்ட சடையன் காடு பகுதியில், பல்நோக்கு சேவை மைய கட்டிடம் அமைத்து தர வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Next Story