கன்னியாகுமரியில் 100 கண்காணிப்பு கேமரா தொடக்க நிகழ்ச்சி

கன்னியாகுமரியில் 100 கண்காணிப்பு கேமரா தொடக்க நிகழ்ச்சி
X
எஸ் பி துவக்கினார்
கன்னியாகுமரி பகுதியில் ஊர் காவல் கண்கானிப்பு திட்டத்தில் 100 கேமராக்கள் தொடக்க நிகழ்ச்சியை எஸ்.பி., ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இன்ஸ்பெக்டர் சரவணன் வரவேற்றார்.டி.எஸ்.பி., மகேஷ்குமார் ,கன்னியாகுமரி நகராட்சி கவுன்சிலர்கள் சி.எஸ்.சுபாஷ், கன்னியாகுமரி பங்கு பேரவை துணை தலைவர் டாலன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.பூலோக ராஜா உட்பட பல்வேறு ஊர் தலைவர்கள் கலந்து கொண்டனர். பின்னர் எஸ்.பி.,ஸ்டாலின் பேசியதாவது; ஆடு மாடு திருடியது போய் டிஜிட்டல் திருட்டு வந்துவிட்டது. நமது மாவட்டத்தில் 19 லட்சத்து 50 பேர் உள்ளனர். காவல்துறையில் 2 ஆயிரம் பேர் உள்ளனர். குற்றங்கள் குறைய பொதுமக்கள் ஒத்துழைப்பு முக்கியம். பொதுமக்களின் நம்பிக்கையை பெற்றால் காவல்துறைக்கு தகவல் கிடைக்கும்.இதன் மூலம் குற்றங்கள் குறையும். அதற்காக தான் இத்திட்டம் தொடங்கப்பட்டது. குற்றத்தை தடுப்பதற்கும்,கண்டுபிடிக்கவும், குற்றவாளிக்கு தண்டனை வாங்கி கொடுக்கவும் கேமரா முக்கிய பங்கு வகிக்கிறது. கேமரவை பராமரிக்க வேண்டும். கன்னியாகுமரி மாவட்டம் குற்றம் இல்லாத மாவட்டமாக மாறும். இவ்வாறு அவர் பேசினார்.
Next Story