ராசிபுரம் அருகே வேகத்தடை, தெருவிளக்கு அமைத்து தரக்கோரி 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சாலையின் நடுவில் மரக்கிளைகளை வைத்து சாலை மறியல்:

ராசிபுரம் அருகே வேகத்தடை, தெருவிளக்கு அமைத்து தரக்கோரி 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சாலையின் நடுவில் மரக்கிளைகளை வைத்து  சாலை மறியல்:
X
ராசிபுரம் அருகே வேகத்தடை, தெருவிளக்கு அமைத்து தரக்கோரி 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சாலையின் நடுவில் மரக்கிளைகளை வைத்து சாலை மறியல்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த அணைப்பாளையம் புறவழிச் சாலை அருகே உள்ள பனங்காடு பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் புதிதாக அமைக்கப்பட்ட நாமக்கல் to திருச்செங்கோடு நெடுஞ்சாலையில் வாகனங்கள் அதிவேகமாக செல்வதாகவும் அடிக்கடி விபத்து நடைபெறுவதாக கூறி கிராம மக்கள் வேகத்தடை அமைத்து தரக் கோரி கடந்த 1 வருடமாக கோரிக்கை வைத்து வந்ததாக கூறப்படுகிறது.ஆனால் எவ்வித நடவடிக்கை மேற்கொள்ளாத நிலையில் நேற்று இரவு அப்பகுதியை சேர்ந்தவர் இரு சக்கர வாகனத்தில் சென்றவர் மீது அடையாளம் தெரியாத கார் மோதியதில் அந்த நபர் தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் வேகத்தடை அமைத்து தரக் கோரியம் புறவழிச்சாலையில் தெருவிளக்குகள் அமைத்து தரகோரியும் 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மரக்கிளைகளை சாலையின் நடுவில் வைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் பின்னர் புதுச்சத்திரம் காவல் ஆய்வாளர் கோமதி அவர்கள் காவல் துறையினர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்து கலைந்து சென்றனர். மறியலின் போது பெண் ஒருவர் வெயிலின் தாக்கத்தினால் மயக்கம் அடைந்ததால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. கிராம மக்களின் சாலை மறியலால் அணைப்பாளையம் புறவழிச் சாலை நாமக்கல் to திருச்செங்கோடு செல்லும் சாலையில் 1 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது...
Next Story