குட்கா விற்பனை செய்த வாலிபர் கைது - 100 கிலோ குட்கா பறிமுதல்

குட்கா விற்பனை செய்த வாலிபர் கைது - 100 கிலோ குட்கா பறிமுதல்
X
விளாம்பட்டி அருகே மளிகை கடையில் வைத்து குட்கா விற்பனை செய்த வாலிபர் கைது - 100 கிலோ குட்கா பறிமுதல்
திண்டுக்கல், நிலக்கோட்டையை அடுத்த விளாம்பட்டி பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக விளாம்பட்டி போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து போலீசார் அப்பகுதியில் சோதனை மேற்கொண்ட போது விளாம்பட்டி அருகே சிறுநாயக்கன்பட்டி பகுதியில் மதிவாணன்(27) என்பவர் தனது மளிகை கடையில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை செய்வது தெரிய வந்ததை தொடர்ந்து போலீசார் மதிவாணனை கைது செய்து மளிகை கடையில் பதுக்கி வைத்திருந்த 100 கிலோ தடை செய்யப்பட்ட குட்காவை பறிமுதல் செய்து மதிவாணனை நிலக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
Next Story